×

கம்பத்தில் நகர்ப்புற சுகாதார நலமையம் அமைப்பதற்கு இடம் ஆய்வு

கம்பம்: கம்பத்தில் நகர்ப்புற சுகாதார நலமையம் அமைப்பதற்கான இடத்தை, கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ தலைமையில் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். மத்திய அரசின் 15வது நிதி ஆணையத்தின் முக்கியமான அம்சங்களில் ஒன்று, நகர்ப்புறங்களில் நகர்ப்புற-சுகாதாரம் மற்றும் ஆரோக்கிய மையங்களுக்கு கீழ், ஆயுஷ்மான் பாரத் உடல் நலம் மற்றும் ஆரோக்கிய மையங்களை நிறுவுவதாகும். இது தொடர்பாக மாநகராட்சிகள், நகராட்சிகளின் ஆணையர்கள், நகர்ப்புற சுகாதார நலமையம் அமைப்பதற்கான இடங்களைக் கண்டறிந்து உறுதி செய்ய, தமிழக தேசிய சுகாதார திட்ட இயக்குநர் கடிதம் அனுப்பி உள்ளார்.

இதன்படி, கம்பம் நகராட்சியில் கம்பம்மெட்டு ரோடு பைபாஸ் இணைப்புச்சாலை அருகே, நகர்ப்புற சுகாதார நலமையம் அமைப்பதற்கு, நகராட்சிக்கு சொந்தமான இடத்தை தேர்வு செய்வதற்காக, கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன் தலைமையில், உத்தமபாளையம் தாசில்தார் அர்ச்சுணன், காமயகவுண்டன்பட்டி அரசு ஆரம்ப சுகாதாரநிலைய சித்த மருத்துவ அலுவலர் சிராஜூதீன் ஆய்வு செய்தனர். இடத்தின் பதிவுகள் அனைத்தும் முறையாக இருந்தால், விரைவில் பூமிபூஜை போடப்படும் என எம்எல்ஏ தெரிவித்தார். நிகழ்ச்சியில், கம்பம் (தெ) நகர திமுக பொறுப்பாளர் சூர்யா செல்வகுமார், திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் குரு இளங்கோ, சமூக ஆர்வலர் கம்பம் சாதிக் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Urban Health Center ,Kambam ,
× RELATED கம்பம் பகுதியில் பறக்கும் படையினர் தீவிர சோதனை