×

நத்தம் பகுதியில் பொங்கலையொட்டி களைகட்டும் மாட்டு சலங்கைகள் விற்பனை

நத்தம்: திண்டுக்கல் மாவட்டத்தில் நத்தம் பகுதி மலையும், மலைசார்ந்த இடமாக உள்ளது. மேலும், மானாவாரி நிலங்களும், நஞ்சை மற்றும் புஞ்சை விவசாயமும் நடைபெற்று வருகிறது. இத்துடன் விவசாயிகளின் பொருளாதாரத்தை பெருக்கும் வகையில், கால்நடை வளர்ப்பு அதிகமாக உள்ளது.
 இதில் எருது, காளை மாடுகள், ஆடு, கோழி ஆகியவை மிக முக்கியமானவை. வரும் 14ந் தேதி பொங்கல் பண்டிகை வருவதையொட்டி தங்கள் கால்நடைகளை அலங்கரிப்பதற்காக, காளைகளுக்கு கழுத்தில் அணிவதற்கான சலங்கைகள், குங்குமம் மற்றும் பல்வேறு வண்ணப் பொடிகள், பிடி, மூக்கு கயிறுகள் பல்வேறு வண்ணங்களில் நூல் கயிறுகளின் விற்பனையும், காய்கறி சந்தைகளில் பச்சை மொச்சைக்காய், காய்கறிகள் விற்பனை அமோகமாக உள்ளது. மேலும், இப்பகுதியில் காளைகளுக்கு அணிவிப்பதற்காக துண்டு, வேட்டி விவசாயிகள் மற்றும் செல்வந்தர்கள் வாங்கும் வகையில், பல்வேறு தரத்தில் விற்பனைக்காக சாலையோரங்களில் புதிதாக கடைகள் அமைக்கப்பட்டு பொங்கலுக்கான கைத்தறி ஜவுளி விற்பனையும் அமோகமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து காளைகளுக்கான சலங்கை தயாரிக்கும் தொழிலாளி கணேசன் கூறுகையில், ‘பொங்கலுக்கு காளை மாடுகளுக்கு அணிவிப்பதற்கு சலங்கைள் மற்றும் கயிறுகள் விற்பனை நன்றாக உள்ளது. 11 மணிகள் பொருத்திய சலங்கை ரூ.2 ஆயிரத்து 250 முதல் 2ஆயிரத்து 500 வரை தரத்திற்கு தகுந்தாற் போல் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், அரியக்குடி மணி மற்றும் குஞ்சம் வைத்து கைவேலை செய்து அழகுற கழுத்தில் அணியும் சலங்கைகளும் தயார் செய்யப்படுகிறது. மேலும் பல்வேறு நூல் கயிறுகள் கிலோ ரூ.250 முதல் 400 வரை தரத்திற்கு தகுந்தாற் போல் விற்பனை செய்து வருகிறோம்’ என்றார்.

Tags : Pongalaiyotti ,Natham ,
× RELATED நத்தம் கோவில்பட்டியில் பகவதி அம்மன் கோயில் திருவிழா