கோடங்கிபாளையம் ஊராட்சியில் கொரோனா தடுப்பு நடவடிக்கை

சோமனூர்: கோடாங்கிபாளையம் ஊராட்சியில் கொரோனா  தடுப்பு நடவடிக்கை பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. சோமனூர் அடுத்த கோடங்கிபாளையம் ஊராட்சியில் கொரோனா மற்றும் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்க தீவிரமாக தடுப்புப் பணிகள் மற்றும் தூய்மைப்பணிகள் நடைபெற்று வருகின்றன. மக்கள் அனைவரும் எச்சரிக்கையாக இருக்கும்படி துண்டு நோட்டீஸ் வினியோகம் செய்து அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

ஊரைத் தூய்மையாக வைத்துக்கொள்ளவும், தனிமனித இடைவெளி கடைபிடிக்கவும், முகக்கவசம் அணியவும் ஊராட்சி நிர்வாகம் அறிவுறுத்தி வருகிறது. ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி தலைமையில் அனைத்து வார்டுகளிலும் கொசு மருந்து அடித்தும், வீடு வீடாக சென்று தடுப்பு ஊசி செலுத்தியவர்களின் விபரம் கேட்டறிந்தும் வருகின்றனர்.

Related Stories: