×

ஆவுடையப்பன் கோரிக்கை ஏற்பு ரூ.67 கோடியில் கல்லிடைக்குறிச்சி அம்பை புறவழிச்சாலை பணிகள்


நெல்லை, ஜன. 12:  கல்லிடைக்குறிச்சி மற்றும் அம்பை, ஆகிய நகரங்களில் உள்ள சாலைகள் மிக குறுகலாகவும், போக்குவரத்து நெரிசலாகவும் உள்ளதால் வாகன விபத்துகள் நிகழ்ந்து உயிரிழப்பு ஏற்படுகிறது. இந்த நிலையை போக்க கடந்த திமுக ஆட்சியில் கல்லிடைக்குறிச்சி - அம்பை. புறவழிச்சாலை திட்டம் தீட்டப்பட்டு முதற்கட்ட பணிகள் தொடங்கப்பட்டு நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்தது. இந்நிலையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு கடந்த 10 ஆண்டு கால  அதிமுக ஆட்சியில் இந்த புறவழிச்சாலை திட்டம் கிடப்பில் போடப்பட்டது. இதையடுத்து தமிழகத்தில் திமுக ஆட்சி அமைந்தவுடன் கல்லிடைக்குறிச்சி முதல் அம்பை வரை புறவழிச்சாலை உருவாக்கப்படும் என்று தேர்தலின் போது உறுதி அளிக்கப்பட்டது. எனவே அம்பை பொதுமக்களின் நீண்டநாள் கோாிக்கையான அம்பை புறவழிச்சாலையை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் கோாிக்கை விடுத்தார்.  இந்நிலையில் அம்பை புறவழிச்சாலை திட்டத்திற்கு ரூ.27.28 கோடி மதிப்பீட்டில் நில எடுப்பு பணிகள் நடந்து வருவதாகவும், புறவழிச்சாலை அமைப்பதற்கு ரூ.66.70 கோடிக்கான திட்டம் தயார் செய்யப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது என சென்னை, நெடுஞ்சாலைத்துறை தலைமை பொறியாளா் கடிதம் மூலம் ஆவுடையப்பனுக்கு தகவல் தொிவித்துள்ளார். எனவே விரைவில் இத்திட்டத்தை தமிழக முதல்வர் அறிவிப்பார். இதன் மூலம் பொதுமக்களின் நீண்ட நாள் கோாிக்கையான கல்லிடைக்குறிச்சி -  அம்பை போக்குவரத்து நொிசல் பிரச்னை முடிவிற்கு வரும் என நெல்லை கிழக்கு மாவட்ட திமுக செயலாளர் ஆவுடையப்பன் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Tags : Kallidaikurichi ,Ambai ,
× RELATED விஷம் குடித்த காவலாளி சாவு