நயினார்புரம் தர்மபதியில் திருக்கல்யாண திருஏடு வாசிப்பு திருவிழா

உடன்குடி, ஜன. 12: மெஞ்ஞானபுரம் அருகே நயினார்புரம் தர்மயுக திருப்பதியில் திருக்கல்யாண திரு ஏடு வாசிப்பு திருவிழா நடந்தது. இதில் வள்ளியூர் அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் தர்மர், திரு ஏடு வாசிப்பை துவக்கிவைத்தார். இதையடுத்து அய்யாவின் அருளிசை புலவர் குரு சிவச்சந்திரன் தலைமையில் சுரேந்திரன், கோபாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் திருக்கல்யாண திரு ஏடு வாசித்தனர். தொடர்ந்து நடந்த திருவிளக்கு பூஜையில் பெண்கள் பங்கேற்று சிறப்பு வழிபாடு நடத்தினர். முன்னதாக கடந்த 9ம்தேதி மாலையில் பட்டாபிஷேகமும், அதைத்தொடர்ந்து அய்யா வைகுண்டர் புஷ்ப வாகன பவனியும் நடந்தது. பணிவிடைகளை கொட்டங்காடு குணசீலன் செய்திருந்தார். ஏற்பாடுகளை தர்மயுக திருப்பதி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Related Stories: