பூமாதேவி கோயிலில் கால்நாட்டு வைபவம்

கோவில்பட்டி, ஜன. 12: கோவில்பட்டி மந்தித்தோப்பு துளசிங்க நகர் அம்மா பூமாதேவி கோயிலில் கால்நாட்டு வைபவம் நடந்தது. நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு திருவனந்தல் திருப்பள்ளியெழுச்சி நடந்தது. காலை 7 மணிக்கு சிறப்பு அபிஷேக அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நாள் கால்நடுதல், காப்புக் கட்டுதல் மற்றும் சிறப்பு தீபாராதனை நடந்தது. பூஜைகளை லட்சுமணன் சுவாமி தலைமையில் ஆலய அர்ச்சகர் செல்வசுப்பிரமணியன் நடத்தினார். இதில் சுப்பாராஜ் சங்கரேஸ்வரி, மாரியப்பன், மாரீஸ்வரன் மற்றும் திருவிளக்கு பூஜை குழுவினர் மீனாட்சி, பூமாலட்சுமி, மாரி மற்றும் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை அம்மா பூமாதேவி ஆலய குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: