அதிமுக ஆட்சியில் கிராம உதவியாளர் தேர்வில் முறைகேடு பாரதிதாசன் அரசு கல்லூரியில் கொரோனா சிகிச்சைக்காக ஆக்சிஜன் வசதியுடன் 200 படுக்கைகள்

நாகை,ஜன.12: நாகை பாரதிதாசன் அரசு கல்லூரியில் ஆக்சிஜன் வசதியோடு 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையத்தை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் நடந்து வருகிறது. இதன்படி முககவசம் அணிதல், சமூக இடைவெளி பின்பற்றுதல் கட்டாயமாக்குவது, இரண்டு தவணை தடுப்பூசி செலுத்துவது ஆகியவை கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் நாகை பாரதிதாசன் கல்லூரியில் ஆக்சிஜன் வசதியோடு கூடிய 200 படுக்கைகள் கொண்ட கொரோனா சிகிச்சை மையம் நாகை பாரதிதாசன் அரசு கல்லுரியில் தொடங்கப்பட்டுள்ளது. இதை கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார். தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கவுதமன், டிஆர்ஓ ஷகிலா, திட்ட இயக்குநர் பெரியசாமி ஆகியோர் உடன் இருந்தனர்.

லேசான அறிகுறி உள்ள கொரோனா நோயாளிகள் தங்கும் வகையில் இந்த சிகிச்சை மையம் திறக்கப்பட்டுள்ளது. 200 படுக்கைகள் கொண்ட இந்த மையம் 24 மணி நேரமும் செயல்படும். ஆக்சிஜன் வசதியுடன் கூடிய இந்த மையத்தில் மருத்துவர்கள், செவிலியர்கள் பணியில் இருப்பார்கள். சிசிடிவி மூலம் கண்காணிப்பும், கொரோனா நோயாளிகள் மன இறுக்கம் போக்க திரைப்பட பாடல்கள் ஒலிபரப்பு என பல்வேறு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது என்றார்.

வேதாரண்யம்: வேதாரண்யம் ஆசிரியர் பயிற்சி பள்ளியில் 67 படுக்கைகளுடன் புதிய கொரோனா சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை நாகை மாவட்ட கலெக்டர் அருண்தம்புராஜ் நேரில் ஆய்வு செய்தார். ஆய்வின்போது திமுக பொதுக்குழு உறுப்பினர் மரைமலை, மேற்கு ஒன்றிய திமுக செயலாளர் உதய முருகையன், திமுக நகர செயலாளர் புகழேந்தி, வழக்கறிஞர் அன்பரசு நிழல், ஆர்டிஓ துரைமுருகன், தாசில்தார் ரவிச்சந்திரன், நகராட்சி ஆணையர் ஹேமலாதா, பொறியாளர் மனோகரன், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன் மற்றும் சுகாதார துறையினர் கலந்து கொண்டனர்.

Related Stories: