×

22 பதவிகளை ரத்து செய்து புதிதாக தேர்வு நடத்தக்கோரி ஆர்ப்பாட்டம் சீர்காழியில் குவிந்த கேரள அன்னாசி கொள்ளிடம் பகுதியில் டெங்கு கொசு அழிக்கும் பணி தீவிரம்

கொள்ளிடம், ஜன.12: மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் பகுதியில் கடந்த கன மழைக்கு பிறகு கொசுக்கள் உற்பத்தி அதிகரித்துள்ளது. கொசு தொல்லையால் கிராம மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். மேலும் பகல் நேரங்களில் பழைய டயர்கள், பிளாஸ்டிக் பொருள்கள், உடைந்த கண்ணாடி பாட்டில்கள் தேங்காய் ஓடுகள் உள்ளிட்ட பல பொருட்களில் தேங்கியுள்ள மழைநீரில் டெங்கு கொசு வளர்ச்சி பெற்று வருவதாக கூறப்படுகிறது. பகல் நேரங்களில் கடிக்கும் இந்த கொசுவால் டெங்கு காய்ச்சல் ஏற்படுகிறது. எனவே அதிகாரிகள் நேற்று மாவட்ட காசநோய் தடுப்பு அலுவலர் சிங்காரவேல், தலைமையில் கொள்ளிடம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கொளஞ்சி, ஊராட்சி மன்ற தலைவர் கனகராஜ், துணைத் தலைவர் சிவப்பிரகாசம் மற்றும் சுகாதார பணியாளர்கள், ஊராட்சி ஊழியர்கள் நேற்று முதன் முதலாக கொள்ளிடம் அருகே உள்ள தண்ணீர் பந்தல் கிராமத்தில் கொசு மருந்து அடிக்கும் பணியை துவக்கினர். வீடு வீடாகச் சென்று விசைத் தெளிப்பான் மூலம் கொசு மருந்து தெளித்தனர். இதுகுறித்து மாவட்ட மலேரியா தடுப்பு அலுவலர் சிங்காரவேல் கூறுகையில், தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் கொசு மருந்து தெளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் மலேரியா காய்ச்சல் அறவே இல்லை. டெங்கு காய்ச்சல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. பொதுவாக காய்ச்சல் உருவாவதற்கு காரணமான கொசுக்கள் இனப்பெருக்கம் செய்யக் கூடிய இடங்கள் கண்டுபிடித்து முற்றிலும் அழிக்கப்பட்டு வருகிறது. எனவே மாவட்டத்தில் காய்ச்சல் அறவே இல்லாமல் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது என்றார்.

Tags : Kerala Pineapple Kollidam ,Sirkazhi ,
× RELATED சீர்காழி சட்டைநாதர்சுவாமி கோயிலில் சித்திரை பெருவிழா கொடியேற்றம்