3 நாட்கள் அலுவலகம் மூடல் சமத்துவ பொங்கல் கொண்டாட்டம்

பெரம்பலூர்,ஜன.12: பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன் சிஐடியூ ஆட்டோ சங்கம் சார்பாக மக்கள் ஒற்றுமையை வலியுறுத்தி சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. இந்த விழாவை சிஐடியூ மாவட்ட தலைவர் அகஸ்டின் துவங்கி வைத்தார். விழாவில் ஆட்டோ சங்க மாவட்ட செயலாளர் ரெங்கநாதன், கிளை நிர்வாகிகள் மற்றும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் மாவட்ட செயலாளர் ரமேஷ், மாதர் சங்கத்தின் மாவட்ட துணை தலைவர் கலையரசி, நகராட்சி ஊழியர் சங்கத்தின் மாவட்ட தலைவர் பொன்ராஜ், மற்றும் ஏராளமான ஆட்டோ உறுப்பினர் கலந்துகொண்டு கலந்து கொண்டனர். இந்தியாவை பாதுகாப்போம், மக்கள் ஒற்றுமையை பாதுகாப்போம் என கூறி, சமத்துவப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நல்லிணக்க நடவடிக்கை களை பேணிக்காப்போம் என வலியுறுத்தப்பட்டது. அனைவருக்கும் சர்க்கரை பொங்கல், வெண் பொங்கல் வழங்கப்பட்டது.

Related Stories: