விராலிமலை ஒன்றியத்தில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது

விராலிமலை, ஜன.12: விராலிமலை ஒன்றியத்தில் கட்டிமுடிக்கப்பட்ட கட்டிடங்கள் மக்கள் பயன்பாட்டுக்கு வருகிறது: அமைச்சர்கள் எஸ். ரகுபதி, சிவ.வீ. மெய்யநாதன் பங்கேற்று திறந்து வைக்கின்றனர். விராலிமலை ஊராட்சி ஒன்றியத்தில் கட்டி முடிக்கப்பட்ட கட்டிடங்கள், புதிய கட்டிடங்களுக்கான பூமி பூஜை, ஆவாஸ் பிளஸ் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு வழங்குதல், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சுழல் நிதி வழங்கும் நிகழ்வு என பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று (புதன்கிழமை) நடைபெறுகிறது. இதில் அமைச்சர்கள் எஸ்.ரகுபதி, வீ.மெய்யநாதன், திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தலைமையில் நடைபெறும் இவ்விழாவில் விராலிமலை ஊராட்சி ஒன்றியம், நடுப்பட்டி மற்றும் நீர்பழனியில் ஊராட்சி மன்ற கட்டிடங்கள், அங்கன்வாடி கட்டிடம், இரண்டு வகுப்பறையுடன் கூடிய பள்ளிக்கட்டிடம், விளாப்பட்டி ஊராட்சியில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய பள்ளிக்கட்டிம், மருதம்பட்டி, ஆங்குடி ஊராட்சிகளில் ஊராட்சி ஒன்றிய பொது நிதியில் இருந்து கட்டப்படும் பள்ளிக்கட்டிடத்திற்கான பூமிபூஜை, விராலூர் ஊராட்சி பகவான்பட்டி மற்றும் தேராவூர் ஊராட்சிகளில் இரண்டு வகுப்பறையுடன் கூடிய பள்ளிக்கட்டிடம் உள்ளிட்டவைகளை சட்டம், நீதிமன்றங்கள், சிறைச்சாலை மற்றும் ஊழல் தடுப்பு துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, சுற்றுச்சூழல் மற்றும் மாசுக் கட்டுப்பாடு, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீ.மெய்யநாதன் ஆகியோர் பங்கேற்று திறந்துவைக்கின்றனர்.

அதனைத் தொடர்ந்து விராலிமலை ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் நடைபெறும் ஆவாஸ் பிளஸ் திட்டத்தில் பயனாளிகளுக்கு வீடு வழங்குதல் மற்றும் மகளிர் சுயஉதவிக் குழுக்களுக்கு சுழல் நிதி வழங்குதல் உள்ளிட்ட நிகழ்ச்சியில் பங்கேற்று பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்குகின்றனர். விழாவில் திமுக வடக்கு மாவட்ட செயலாளர் கே.கே. செல்லபாண்டியன், விராலிமலை ஒன்றியக் குழுத்தலைவர் காமுமணி, துணைத்தலைவர் லதா இளங்குமரன், உதவி இயக்குநர்(ஊராட்சிகள்) ராம், வட்டார வளர்ச்சி அலுவலர் ரவிசந்திரன், ரமேஷ் (கி.ஊ), ஊராட்சி மன்றத் தலைவர்கள் இளங்கோ(நடுப்பட்டி), அங்கயற்கண்ணி(நீர்பழனி), சோலை(விளாப்பட்டி), ராஜலெட்சுமி(மருதம்பட்டி), பழனிச்சமி(ஆலங்குடி), பழனியாண்டி(விராலூர்), ரூபப்பிரியா(தேராவூர்) உள்ளிட்ட உள்ளாட்சி பிரதிநிதிகள், ஊராட்சி துறை அதிகாரிகள் பங்கேற்கின்றனர். விழா ஏற்பாடுகளை துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கண்ணன் தலைமையில் ஊராட்சி துறையினர் செய்து வருகின்றனர்.

Related Stories: