கொப்பனாப்பட்டியில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம்

பொன்னமராவதி, ஜன. 12: பொன்னமராவதி அருகே கொப்பனாப்பட்டியில் கால்நடை சிறப்பு முகாம் நடந்தது. கொப்பனாப்பட்டி ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. முகாமிற்கு இலுப்பூர் கால்நடை உதவி இயக்குனர் பாண்டி தலைமை வகித்தார். ஊராட்சித்தலைவர் மேனகா மகேஸ்வரன் முகாமினை தொடங்கி வைத்தார். கால்நடை மருத்துவர்கள் சண்முகநாதன், பிரகானந்தன், கால்நடை ஆய்வாளர்கள் செந்தில்குமார், முத்துக்குமார், கால்நடை பராமரிப்பு உதவியாளர்கள் சாந்தி, சோலைமணி, முருகன் ஆகியோரை கொண்ட மருத்துவக்குழுவினர் கால்நடைகளுக்கு தடுப்பூசியும், நோய் உள்ள கால்நடைகளுக்கு சிகிச்சையும் அளித்து மருந்து மாத்திரை வழங்கினர். சிறந்த கிடேரி கன்றுகளுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

Related Stories: