புதிதாக 30 பேருக்கு கொரோனா தொற்று

புதுக்கோட்டை, ஜன.12: புதுக்கோட்டை மாவட்டத்தில் நேற்று 30 பேருக்கு கொரோனா தொற்று புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா தடுப்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஒன்றிய வாரியாக தடுப்பு பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர். மேலும் தினசரி கொரோனா தடுப்பூசி போடும் பணியில் சுகாதாரத்துறை ஈடுபட்டு வருகிறது. பொதுமக்கள் ஆர்வமுடன் தடுப்பூசிகளை போட்டுவருகின்றனர். இந்நிலையில் மாவட்டத்தில் கொரோனா தொற்று நேற்று 30 பேருக்கு கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு புதுக்கோட்டை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Related Stories: