×

திருவையாறு பகுதியில் வாழைத்தார் விலை வீழ்ச்சி

திருவையாறு.ஜன.12: திருவையாறு சுற்று வட்டார பகுதியில் சுமார் 500 எக்கர் வாழை விவசாயிகள் வாழை சாகுபடி செய்து வருகிறார்கள். ஒரு ஏக்கரில் 1000 வாழை கன்றுகளை வைத்து பயிர் செய்கிறார்கள். இதற்கு ஒரு ஏக்கருக்கு 50 ஆயிரம் வரை செலவாகிறது. 1000 வாழை கன்று வைத்தால் அதில் 800 வாழை மரம் மட்டும்தான் தார் விடும். வாழை தார் வளர்வதற்கு 8 முதல் 10 மாதம் ஆகும். வாழை விவசாயிகள் குறிப்பாக பொங்கலுக்கு வாழைத்தாரை வெட்டி விற்பனை செய்வதற்கு ஏற்றார்போல் பயிர் செய்வார்கள். திருவையாறு சகாயமாதா ஏலமையத்தில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருவையாறு சுற்றுவட்டார பகுதிகளிலிருந்து வாழை விவசாயிகள் வாழை தார்களை கொண்டு வந்து ஏலம் விடுவார்கள். கடந்த ஆண்டு ஒரு நாளைக்கு சுமார் 7 ஆயிரம் தார்கள் கொண்டுவந்து ஏலம் விட்டனர்.

இந்த ஆண்டு ஒரு நாளைக்கு 3 ஆயிரம் தார்கள்தான் கொண்டுவந்து ஏலம் விடப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரு வாழை தார் ரூ.400லிருந்து 600 வரை விலை போனது. இந்த ஆண்டு ரூ.100லிருந்து 400 வரை விலை போகிறது. இதனால் வாழை விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க வில்லை. கடந்த 8 மாதங்களாக காற்றிலும், மழையிலும், கஷ்டப்பட்டு வளர்த்து வாழை தாரை வெட்டி கொண்டாந்து விற்பனை செய்யும்போது அதற்கு சரியான விலை இல்லாதால் கவலையாகவும் உள்ளனர். கொரோனா தொற்று ஒருபுறம் மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த சூழ்நிலையிலும், வாழைத்தார் விலை இல்லாமல் வீழ்ச்சியில் காணப்படுகிறது. ஏல மையத்தில் காட்டுமன்னார்குடி, ஒரத்தநாடு, திருவோணம், கூத்தாநல்லூர், மதுக்கூர், நன்னிலம், குடவாசல், ஆகிய பகுதிகளிலிருந்து வியாபாரிகள் வந்து வாழைத்தார்களை ஏலம் எடுத்து ஏற்றி செல்கிறனர். இந்த கொரோனா தொற்று காலத்தில் பொங்கல் பண்டிகை முன்னிட்டு வியாபாரிக்கும் எதிர் பார்த்த அளவுக்கு வருமானம், இல்லை, வாழை விவசாயிகளுக்கு எதிர்பார்த்த அளவுக்கு லாபம் இல்லை.

Tags : Thiruvaiyaru ,
× RELATED திருவையாறு நூலகத்தில் உலக புத்தக தின விழா