மேக்கேதாட்டு அணைக்கு இடைகால தடை கோரி உச்ச நீதிமன்றத்தில் புது வழக்கு தொடங்க வேண்டும்

தஞ்சை, ஜன.11: மேக்கேதாட்டு அணைக்கு இடைக்காலத் தடை கோரி தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் புது வழக்குத் தொடுக்க வேண்டும் என காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் மணியரசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: மேக்கேதாட்டு அணை கட்டுவதற்கான கால்கோள் விழா போல் 9.1.2022 அன்று கர்நாடக காங்கிரசார் மேக்கேதாட்டு பகுதியில் உள்ள சங்கமத்தில் 11 நாள் நடைபயண பேரணியின் தொடக்க விழா நடத்தியுள்ளனர். அதில் 20 ஆயிரம் பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. காங்கிரசாரின் தொடர் குற்றச்சாட்டுக்கு கர்நாடகத்தின் முதலமைச்சர் பசவராஜ் பொம்மை 22.12.2021 அன்று சட்டப்பேரவையில், “விரைவில் மேக்கேதாட்டு அணையின் கட்டுமான வேலைகள் தொடங்கப்படும். ஒன்றிய அரசின் நீர்வளத்துறை ஏற்கெனவே அனுமதி அளித்து விட்டது. காவிரி மேலாண்மை ஆணையம் விரைவில் அனுமதி அளித்துவிடும்” என்றார். உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வருவதற்கு முன், அதன் விசாரணையில் உள்ள மேக்கேதாட்டில் அணை கட்டுவதற்கு தடை ஆணை கேட்டு, தமிழ்நாடு அரசு உச்ச நீதிமன்றத்தில் அவசர மனு தாக்கல் செய்ய வேண்டும்.

Related Stories: