பூதலூர் அரசு மருத்துவனை நுழைவாயிலில் தரமான தார்சாலை

வல்லம், ஜன.12: தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனை நுழைவாயில் பகுதியில் தரமான தார் சாலை அமைத்து கொடுக்கப்பட்டதற்காக மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.

தஞ்சை மாவட்டம் பூதலூர் அரசு மருத்துவமனைக்கு சுற்றுப்பகுதிகளை சேர்ந்த கிராமங்களில் இருந்து ஏராளமானோர் சிகிச்சை பெற வந்து செல்கின்றனர். இப்படி வருபவர்களில் வயதானவர்கள் எண்ணிக்கையும் அதிகம். இந்த மருத்துவமனை சாலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்று பூதலூர் மக்கள் உரிமைக் கூட்டமைப்பினர் தொடர்ந்து அரசுக்கு வேண்டுகோள் விடுத்து வந்தனர். இந்நிலையில் இந்த வேண்டுகோளை ஏற்று பூதலூர் அரசு மருத்துவமனையின் நுழைவாயில் பகுதியில் தரமான தார் சாலை அமைக்கப்பட்டது. இதனால் நோயாளிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வயதானவர்கள் தடுமாற்றமின்றி நடந்து செல்வதற்கு ஏதுவாக தரமான சாலை அமைத்து கொடுத்த நெடுஞ்சாலைத்துறை பொறியாளர், ஆய்வாளர், நெடுஞ்சாலைத்துறை அனைத்து பணியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர் ஆகியோருக்கு பூதலூர் மக்கள் உரிமை கூட்டமைப்பு சார்பில் அதன் தலைவர் பழ.ராஜ்குமார் மற்றும் நிர்வாகிகள் நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்தனர்.

Related Stories: