நோயாளிகள் மகிழ்ச்சி திருச்சிற்றம்பலத்தில் முதன்மை கல்வி அலுவலர் திடீர் ஆய்வு

பேராவூரணி, ஜன, 12: பேராவூரணி அருகே உள்ள திருச்சிற்றம்பலம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சிவக்குமார் நேற்று ஆய்வு செயுதார். ஆய்வின்போது கொரோனா தடுப்பு நடைமுறை விதிகள் முழுமையாக கடைபிடிக்கப்படுகிறதா என ஆசிரியர்களிடம் கேட்டறிந்தார். மேலும் கொரோனா தடுப்பு குறித்து மாணவர்களிடையே பேசினார். ஆய்வின்போது பட்டுக்கோட்டை மாவட்ட கல்வி அலுவலர் திராவிடசெல்வம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் தேன்மதி, தலைமை ஆசிரியர் (பொ) அந்தோணிசாமி மற்றும் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

Related Stories: