×

திருவாரூர் ஒன்றிய அலுவலகத்தில் ரூ.1.44 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திருவாரூர், ஜன.12: திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒரு கோடியே 44 லட்சம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வழங்கினார். திருவாரூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமூக நலத்துறையின் சார்பில் ஏழைப் பெண்களுக்கான திருமண உதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நேற்று டிஆர்ஓ சிதம்பரம் தலைமையில் நடைபெற்றது. ஆர்டிஓ பாலச்சந்தர், ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் புலிவலம் தேவா, துணைத் தலைவர் தியாகராஜன், பள்ளி வளர்ச்சி குழு உறுப்பினர் பிரகாஷ், ஊராட்சி ஒன்றிய ஆணையர் புவனேஸ்வரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட சமூக நல அலுவலர் கார்த்திகா வரவேற்றார். இதில் திருமண உதவித் தொகையாக தலா 8 கிராம் தங்க காசுகள் மற்றும் 12ம் வகுப்பு வரையில் படித்தவர்களுக்கு ரூ 25 ஆயிரம் மற்றும் பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் என மொத்தம் 183 பயனாளிகளுக்கு ரூ. ஒரு கோடியே 43 லட்சத்து 97 ஆயிரத்து 807 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை எம்எல்ஏ பூண்டி கலைவாணன் வழங்கி பேசுகையில், தமிழகத்தில் ஆட்சி செய்து வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் பொறுப்பேற்ற 6 மாதத்திற்குள்ளாகவே பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக விளங்கி வருகிறார். நலத்திட்டங்கள் மூலம் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெற்று வருகின்றனர். அந்தவகையில் திருமண உதவித் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதனை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்றார். இதேபோல் நன்னிலம் ஊராட்சி ஒன்றியத்தில் 149 பயனாளிகளுக்கு ரூ ஒரு கோடியே 20 லட்சத்து 81 ஆயிரத்து 957 மதிப்பிலான திருமண உதவி தொகையினை எம்.எல்.ஏ பூண்டி கலைவாணன் வழங்கினார்.

Tags : Thiruvarur Union Office ,
× RELATED ரூ.3.70 கோடி மதிப்பீட்டில் திருவாரூர்...