வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம்

குறிஞ்சிப்பாடி, ஜன. 11:  வடலூர் வள்ளலார் தைப்பூச ஜோதி தரிசனம் வரும் 17ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள வடலூர் வள்ளலார் சத்திய ஞான சபையில் 151வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசன பெருவிழாவையொட்டி வரும் 17ம் தேதி காலை 5 மணி அளவில் அருட்பெருஞ்ஜோதி அகவல் பாராயணம் நடைபெறுகிறது. தொடர்ந்து 7.30 மணி அளவில் சன்மார்க்கக் கொடி ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.அதே நேரத்தில், மருதூர் வள்ளலார் சன்னதி, நற்கருங்குழி வள்ளலார் சன்னதி, மேட்டுக்குப்பம் சித்தி வளாகம் ஆகிய இடங்களிலும் செம்பக கொடியேற்று நிகழ்ச்சி நடைபெறுகிறது. மறுநாள், 18ம் தேதி காலை 6 மணி, 10 மணி, பகல் 1 மணி, இரவு 7, 10 மணி, 19ம் தேதி அதிகாலை 5.30 மணி என ஆறு காலங்களில் 7 திரைகள் நீக்கி, ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை கடலூர் இணை ஆணையர் அசோக் குமார் தலைமையில் உதவி ஆணையர் பரணிதரன், நிர்வாக அதிகாரி ராஜா சரவணகுமார், ஆய்வாளர் வசந்தம் ஆகியோர் செய்து வருகின்றனர். 

Related Stories: