இருதரப்பு மோதல் 9 பேர் மீது வழக்கு

விருத்தாசலம், ஜன. 11: விருத்தாசலம் அருகே உள்ள குப்பநத்தநல்லுார் கிராமத்தைச் சேர்ந்தவர் கொளஞ்சிநாதன்(55). இவருக்கும், சகோதரர் வீரமுத்து(50) என்பவருக்கும் இடப் பிரச்சினை சம்பந்தமாக முன்விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று முன்தினம் இவர்களுக்குள் மீண்டும் ஏற்பட்ட தகராறு காரணமாக இருவரும் தனது ஆதரவாளர்களுடன் திட்டித் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டனர். இதுகுறித்து வீரமுத்து, கொளஞ்சிநாதன் இருவரும் கொடுத்த புகாரின் பேரில் வீரமுத்து, அவரது மனைவி மணிமேகலை, மகன் விக்னேஷ், கொளஞ்சிநாதன், அவரது மனைவி அஞ்சாயி, மகன் வீரமணிகண்டன், அவரது மனைவி பாக்கியலட்சுமி, ஆதரவாளர்கள் மாயவேல், மனைவி அஞ்சலை ஆகிய 9 பேர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: