வடலூர் நகராட்சி வாக்காளர் பட்டியல் வெளியீடு

குறிஞ்சிப்பாடி, ஜன. 11: வடலூர் நகராட்சி உள்ளாட்சி தேர்தலுக்கான, புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியலை ஆணையாளர் குணாளன் வெளியிட்டார். தமிழக தேர்தல் ஆணையம் தமிழகத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. பேரூராட்சியாக இருந்து, கடந்தாண்டு நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்ட வடலூர் நகராட்சியில், கடந்த ஒரு வாரமாக  வார்டுகளை மறுவரையறை செய்யும் பணிகள் தீவிரமாக நடந்தது.இதில், 18 வார்டுகள் 27 வார்டுகளாக உயர்த்தப்பட்டது. இதையடுத்து, தமிழக தேர்தல் ஆணைய கால அட்டவணைப்படி, வடலூர் நகராட்சியில் உள்ள 27 வார்டுகளுக்கான புகைப்படத்துடன் கூடிய, வரைவு வாக்காளர் பட்டியலை நகராட்சி ஆணையர் குணாளன் வெளியிட்டார். நிகழ்ச்சியில், நகரமைப்பு ஆய்வாளர் ஜின்னா, பொறியாளர் சிவசங்கர் மற்றும் நகராட்சி அலுவலர்கள், அங்கீகரிக்கப்பட்ட அனைத்து அரசியல் கட்சி பிரமுகர்கள் பங்கேற்றனர்.

Related Stories: