×

கடலூர் மாவட்டத்தில் முன்களப் பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி

கடலூர், ஜன. 11:   கொரோனா நோய் பரவல் ெதாற்று 3வது அலை துவங்கியுள்ள நிலையில் இதன் தாக்கம் வேகமாக பரவி வருகிறது. நோய் பரவலை தடுக்கும் வகையில், தடுப்பு ஊசி செலுத்தும் பணி  தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதற்கிடையே முன்  களப்பணியாளர்கள் உள்ளிட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி நேற்று முதல் துவங்கப்படும் என அறிவிக்கப்பட்டு கடலூரில் இதற்கான பணியை கடலூர்  ஐயப்பன் எம்எல்ஏ தலைமையில் மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் துவக்கி  வைத்தார். ஏற்கனவே 15 முதல் 18 வயது வரை உள்ள சிறார்களுக்கான தடுப்பூசி  போடும் பணியும் நடைபெற்று வரும் நிலையில் தற்போது முன்கள பணியாளர்களுக்கான  பூஸ்டர் தடுப்பூசி போடும் பணி துவங்கப்பட்டுள்ளது.  இதில் சுகாதார பணிகள் இணை இயக்குனர் டாக்டர் ரமேஷ், தேசிய சுகாதார திட்ட  ஒருங்கிணைப்பாளர் டாக்டர் காரல், திமுக நகர செயலாளர் ராஜா, மாவட்ட  பொருளாளர் குணசேகரன், கூட்டுறவு சங்க தலைவர் ஆதி பெருமாள், ரவிச்சந்திரன்,  மாணவரணி நடராஜன், டிப்பர் லாரி உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பிரகாஷ்,  நகராட்சி ஆணையர் விஸ்வநாதன், நகர்நல அலுவலர் டாக்டர் அரவிந்த் ஜோதி  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Kadalur district ,
× RELATED விருத்தாசலம் அருகே தனியார் அனல் மின்நிலையத்தில் கொதிகலனில் தீ விபத்து..!!