பாளை பள்ளியில் மார்கழி திருவிழா

நெல்லை, ஜன. 11: பாளை புஷ்பலதா வித்யாமந்திர் மேல்நிலைப்பள்ளியில் மார்கழி திருவிழா இணையவழியில் நடைபெற்றது. இதில் மாணவர்களின் நிலைக்கு ஏற்ப புராணக் கதைகள் கூறுதல், பஜனை பாடல்கள் பாடுதல், கோலமிடுதல், தோரணங்கள் செய்தல், திருப்பாவை, திருவெம்பாவை ஒப்புவித்தல் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளும், போட்டிகளும் நடத்தப்பட்டன. மேலும் பஜனை பாடல்கள் பாடும் போட்டியில் ஆசிரியர்கள் கலந்துகொண்டனர். பண்பாட்டையும், பாரம்பரியத்தையும் பறைசாற்றும் முறையில் நடந்த இந்நிகழ்ச்சியில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை பள்ளியின் தாளாளர் புஷ்பலதா பூரணன் செய்திருந்தார்.

Related Stories: