திருச்சி கால்நடை பல்கலை.யில் இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி

திருச்சி, ஜன.11: திருச்சி கொட்டப்பட்டு கோழிப்பண்ணை சாலையில் கால்நடை பல்கலைக்கழக பயிற்சி மற்றும் ஆராய்சி மையம் செயல்படுகிறது. இங்கு இன்று (11ம் தேதி) இலவச ஆடு வளர்ப்பு பயிற்சி நடைபெறுகிறது. இதில் வெள்ளாடு, மற்றும் செம்மறியாட்டு இனங்கள், ஆடுகளை தேர்ந்தெடுத்து வாங்குதல், கொட்டகை அமைத்தல், இனவிருத்திப் பராமரிப்பு, தீவன மேலாண்மை, தீவன மரங்கள் சாகுபடி மற்றும் பயன்பாடு, நோய் தடுப்பு முறைகள், ஆலோசனைகள் மற்றும் தொழில்நுட்பங்கள் பற்றிய பயிற்சி அளிக்கப்படும். கொரோனா தடுப்பு வழிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் 20 நபர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவர். பயிற்சியில் சேர விரும்புவோர் 0431-2331715 என்ற எண்ணில் தொடர்புகொண்டு முன்பதிவு செய்ய வேண்டும் என ஆராய்சி மைய தலைவர் ஷிபி தாமஸ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருக்கிறார்.

Related Stories: