×

திருத்துறைப்பூண்டியில் முன்கள பணியாளர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம்

திருத்துறைப்பூண்டி, ஜன.11: திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் முன்கள பணியாளர்களுக்கு மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது. எம்எல்ஏ மாரிமுத்து மூன்றாவது டோஸ் பூஸ்டர் தடுப்பூசி போடும் பணியை துவக்கிவைத்தார். இதில் முன்னாள் நகர்மன்ற தலைவர் பாண்டியன், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் சிவகுமார், மருந்தாளுநர் மணிவண்ணன் மற்றும் செவிலியர்கள், பணியாளர்கள், அலுவலர்கள் கலந்துகொண்டனர். முன்கள பணியாளர்கள் 12 பேர் பூஸ்டர் தடுப்பூசி போட்டுக்கொண்டனர்.

Tags : Booster Vaccination Camp ,Thiruthuraipoondi ,
× RELATED திருத்துறைப்பூண்டி அருகே 2 இருசக்கர...