இந்திய கம்யூனிஸ்ட் கூட்டத்தில் வலியுறுத்தல் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் மறியல் 50 பேர் கைது

தஞ்சை, ஜன.11: மழையால் சேதமடைந்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உட்பட பல கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சையில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது தொடர்பாக 5 பெண்கள் உள்ளிட்ட 30 பேரை போலீசார் கைது செய்தனர். மழையால் மூழ்கி சேதமான நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வழங்க வேண்டும், தமிழக அரசு கோரும் நிதியை மத்திய அரசு உடனடியாக வழங்க வேண்டும், தோட்ட பயிர்களுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும், மனித உயிர் இழப்பிற்கு ரூ.10 லட்சம் மற்றும் ஆடு, மாடுகள் உயிரிழப்பிற்கு உரிய அளவு இழப்பீடு வழங்க வேண்டும். வேலைவாய்ப்பை இழந்துள்ள விவசாயத் தொழிலாளர் குடும்பங்களுக்கு ரூ.10 ஆயிரம் வழங்க வேண்டும்.

நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் ஆன்லைன் பதிவு முறையை ரத்து செய்ய வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தஞ்சை ரயிலடியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் சாலை மறியல் போராட்டம் நடந்தது. மாவட்ட செயலாளர் பாலசுந்தரம், மாவட்டத் தலைவர் வீரமோகன், இந்திய கம்யூனிஸ்ட் மாவட்ட செயலாளர் முத்து உத்திராபதி ஆகியோர் தலைமையில் விவசாயிகள் திரண்டனர். தொடர்ந்து பாதுகாப்பில் இருந்த போலீசார் மறியலில் ஈடுபட்ட 5 பெண்கள் உள்ளிட்ட 30 பேரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். இந்த மறியலால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Related Stories: