சோத்துப்பாளை ஊராட்சி மன்ற தலைவரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு

கந்தர்வகோட்டை, ஜன.11: புதுக்கோட்டை ஒன்றியம் சோத்துப்பாளை ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் வசதி, தெரு விளக்கு போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி கலெக்டரிடம் அளிப்பதற்காக ஊராட்சி தலைவரிடம் கோரிக்கை மனு கொடுத்தனர். புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை ஒன்றியம் சோத்துப்பாளை ஊராட்சி மன்ற தலைவரிடம், இந்த ஊரைச் சேர்ந்த பொதுமக்கள் வீட்டுமனைப்பட்டா, தெருக்களுக்கு குடிநீர் வசதி, தெருவிளக்கு வசதிகள் அமைத்து தர வேண்டும் என்பது உள்பட பல்வேறு தேவைகள் குறித்து மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கிளை செயலாளர் கோவிந்தராஜ் தலைமையில் கலெக்டரிடம் கொடுப்பதற்காக கோரிக்கை மனுவினை சோத்துப்பாளை ஊராட்சி மன்ற தலைவர் முத்துசாமியிடம் அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கந்தர்வகோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜோதிவேல் கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் புதுக்கோட்டை ஒன்றிய செயலாளர் சின்னதுரை, அம்பிகாபதி மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Related Stories: