பெரம்பலூர் கலெக்டர் தகவல் ஆண்டிமடம் பகுதிகளில் புதிய மின் மாற்றி, உயர்கோபுர மின்விளக்குகள்

ஆண்டிமடம்,ஜன.11: அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் பகுதியில் உள்ள கிராமங்களில் மின் ஏற்றத்தாழ்வு நிறைந்த பகுதிகளில் புதிய மின் மாற்றி ஆண்டிமடம் மின்சார வாரியம் சார்பாக அமைக்கப்பட்டு வருகிறது. அதன்படி நேற்று ஜெ.குளத்தார்,

காட்டாத்தூர்,அணிகுதிச்சான், பூவானிப்பட்டு,விளந்தை ஊராட்சி அண்ணங்காரன் குப்பம், இராங்கியம் மெயின்ரோடு, நாகம்பந்தல், ஓலையூர் ஆகிய கிராமங்களில் புதிய மின் மாற்றி மற்றும் பெரியாத்துக்குறிச்சி காலனி, விழுதுடையான் காலனி ஆகிய கிராமப்பகுதிகளில் புதிய உயர் கோபுர மின் விளக்குகளை ஜெயங்கொண்டம் எம்.எல்.ஏ க.சொ.க.கண்ணன் இயக்கி வைத்தார். நிகழ்ச்சியில் உதவி செயற்பொறியாளர் சிலம்பரசன், உதவி மின் பொறியாளர்கள் ரவிச்சந்திரன், லதா மற்றும் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் ரெங்க.முருகன், ஒன்றிய குழு உறுப்பினர் ராமலிங்கம், ஊராட்சி மன்றத் தலைவர்கள் மணி, கொளஞ்சி கோவிந்தசாமி, குமாரி சிவசுப்பிரமணியன், துணைத் தலைவர் ஜான்சிராணி,முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், திமுக நிர்வாகிகள், பொதுமக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Related Stories: