சீர்காழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

சீர்காழி, ஜன.11: மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மேல அகரம் பகுதியில் 100 ஆண்டுகளுக்கு மேலாக குடியிருந்து வரும் இடத்தை எவ்வித குடியிருப்பும் இல்லை என்று முறைகேடாக பத்திரம் பதிவு செய்ததை கண்டித்தும். ஆரப்பள்ளம் ஊராட்சி நல்லூர் பிள்ளையார் கோயில் அருகில் வடிகால் வாய்க்காளை சரி செய்து ஆக்கிரமிப்புகளை அகற்றாததை கண்டித்தும், ஆலாலசுந்தரம் ஊராட்சியில் பல ஆண்டுகளாக பயன்பாட்டில் இருந்த நடைபாதையை தனிநபர் ஆக்கிரமிப்பு செய்ததை கண்டித்தும் சீர்காழி புதிய பேருந்து நிலையம் எதிரே முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஒன்றிய செயலாளர் கேசவன், தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சிங்காரவேலன் சிம்சன் முன்னிலையில் மாவட்ட செயலாளர் சீனிவாசன் கண்டன உரையாற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் ஞானப்பிரகாசம் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஸ்டாலின், மாரியப்பன், விஜயகாந்த், சுந்தரலிங்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: