×

பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 12 பேரின் குடும்பங்களுக்கு ₹36 லட்சம் நிவாரணம்: அமைச்சர்கள் வழங்கினர்

விருதுநகர்: வெம்பக்கோட்டை சிப்பிப்பாறையில் கடந்த 20.3.2020ல் தனியார் பட்டாசு ஆலையில் வெடி விபத்தில் தெற்குவெங்கநல்லூர் மாடசாமி, சூரங்குடியை சேர்ந்த காளியம்மாள், முக்கூட்டுமலை பொன்னுத்தாய், குருசாமி, முருகலட்சுமி, பேச்சியம்மாள், புளியங்குளம் வேலுத்தாய், மைப்பாறை தங்கமலை காளியம்மாள், தாமரை செல்வி, ஜெயபாரதி, சங்குபட்டி முருகையா, சத்திரப்பட்டி பாலசுப்பிரமணியன் ஆகிய 12 பேர் உயிரிழந்தனர்.

இவர்களின் குடும்பங்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக நிவாரணம் வழங்கப்படவில்லை. இந்நிலையில் பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு குடும்பங்களுக்கு நிவாரண உதவி வழங்கும் விழா நேற்று விருதுநகர் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் மேகநாதரெட்டி தலைமை வகித்தார். அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம்தென்னரசு ஆகியோர் 2020 பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த தலா ரூ.3 லட்சம் வீதம் ரூ.36 லட்சத்திற்கான காசோலையை முதல்வரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கினர். இதில் டிஆர்ஓ மங்களராமசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

Tags :
× RELATED விருதுநகரில் சதம் அடித்து விளையாடும்...