×

விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்தம் பருப்பு மூட்டைக்கு ரூ.500 சரிவு

விருதுநகர்: விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்து புது வரத்து எதிர்பார்ப்பால் உளுந்தம்பருப்பு மூட்டைக்கு ரூ.500 குறைந்துள்ளது. புதுவரத்து அதிகரிப்பு காரணமாக விருதுநகர் மார்க்கெட்டில் உளுந்தம்பருப்பு மூட்டைக்கு ரூ.500 குறைந்துள்ளது. இம்மாத இறுதியில் நாடு வத்தல் வரத்து இருக்குமென எதிர்ப்பார்க்கப்படுவதால் விலை குறையுமென எதிர்பார்க்கப்படுவதாக வணிகர்கள் தெரிவிக்கின்றனர்.

உளுந்து (அடைப்பிற்குள் கடந்த வார விலை) (100 கிலோ) லயன் - ரூ.7,200 (7,600), பர்மா உளுந்து பெருவட்டு - ரூ.7,000 (7,500), பர்மா பொடி - ரூ.6,400 (6,700), உருட்டு உளுந்தம்பருப்பு லயன் - ரூ.10,500 (11,000), உருட்டு உளுந்தம்பருப்பு பர்மா பொடி - ரூ.9,000 (9,500), ெபருவட்டு - ரூ.9,500 (10,000), தொளி உளுந்தம்பருப்பு - ரூ.9,000.

விருதுநகர் மார்க்கெட்டில் நேற்றைய விலை நிலவரம்:
பர்மா பாசிப்பயறு - ரூ.7,000, ஆந்திரா பயறு - ரூ.7,000, நாடு பயறு - ரூ.6,800, அவியல் பாசிப்பயறு - ரூ.9,500, பாசிப்பருப்பு நாடு - ரூ.9,200, பாசிப்பருப்பு லயன் - ரூ.9,500, பாசிப்பருப்பு பர்மா - ரூ.9,000.
தான்சானியா துவரை (100கிலோ) - ரூ.5,500, துவரம் பருப்பு இறக்குமதி - ரூ.9,000, லயன் துவரை - ரூ.7,000, துவரம்பருப்பு லயன் - ரூ.10,000, உடைப்பு துவரம் பருப்பு - ரூ.8,500.
குண்டூர் ஏசி குவிண்டால் - ரூ.17,000 முதல் 18,500, முண்டு வத்தல் குவிண்டால் - ரூ.25,000 முதல் ரூ.30,000.
நல்லெண்ணெய் (15 கிலோ) டின் - ரூ.4,208, கடலை எண்ணெய் டின் - ரூ.2,700, பாமாயில் - ரூ.1,840, கடலை புண்ணாக்கு (100 கிலோ) - ரூ.4,900, எள் புண்ணாக்கு (50கி) - ரூ.2,200,
கடலைப் பருப்பு (100 கிலோ) மூட்டை - ரூ.8,000, பொரிகடலை 55 கிலோ மூட்டை - ரூ.4,600. பட்டாணி பருப்பு (100 கிலோ) - ரூ.6,875, பட்டாணி வெள்ளை - ரூ.8,025, மசூர் பருப்பு உருட்டு - ரூ.9,300 லயன் மல்லி (40 கிலோ) ரூ.3,900, நாடு மல்லி (40 கிலோ) - ரூ.3,500 முதல் ரூ.4,600,
மளிகை பொருட்கள் மொத்த விலை கிலோவில்: மஞ்சள் தூள் - ரூ.140, வெந்தயம் - ரூ.110, கடுகு - ரூ.95, சீரகம் - ரூ.190, சோம்பு - ரூ.120, மிளகு - ரூ.480, புளி கிலோ நயம் - ரூ.140, புளி சாதா - ரூ.80, கசகசா - ரூ.1,100, கருப்பு எள் - ரூ.200, வெள்ளை பூண்டு - ரூ.160, பொரிகடலை கிலோ - ரூ.80, சுண்டல் (கருப்பு) கிலோ - ரூ.65, வெள்ளை சுண்டல் - ரூ.105, மண்டை வெல்லம் - ரூ.50, தட்டாம்பயறு - ரூ.80, கருப்பட்டி - ரூ.280 என விற்பனையானது.

Tags : Virudhunagar ,
× RELATED கோயில் திருவிழாவுக்கு பேனர் வைக்கும்...