பெரியகுளம் அருகே காட்டுமாடுகளால் மானாவாரி நிலங்களில் சாகுபடி நாசம்வனத்துறை கட்டுப்படுத்த கோரிக்கை

பெரியகுளம்:  பெரியகுளம் அருகே, மானாவாரி பயிர்களை காட்டுமாடுகள், காட்டுப்பன்றிகள் நாசம் செய்வதால், அவைகளை கட்டுப்படுத்த வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். தேனி மாவட்டம், பெரியகுளம் அருகே உள்ள எண்டப்புளி, காமட்சிபுரம், வேல்நகர், தேவதானபட்டி ஆகிய பகுதிகளில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கரில், விவசாயிகள் எள், சோளம், உழுந்து, தட்டைப்பயிர், கடலை உள்ளிட்ட மானாவாரி பயிர்களை விவசாயிகள் சாகுபடி செய்கின்றனர்.

இந்நிலையில், மானாவரி பயிர்கள் விளைந்து 15 முதல் 20 நாட்களில் அறுவடை செய்ய உள்ள நிலையில், கடந்த 10 நாட்களாக இரவு நேரத்தில் காட்டுமாடு, காட்டுப்பன்றி ஆகியவை பயிர்களை நாசப்படுத்தி வருகின்றனர். வனவிலங்குகளை நடமாட்டத்தை கட்டுப்படுத்த, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டி உள்ள பகுதியில் அகழி அமைக்க, கடந்த 5 ஆண்டுகளாக வனத்துறை அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.  என விவசாயிகள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், பயிர்களை நாசப்படுத்தும் வனவிலங்குகளை தடுத்து நிறுத்த தமிழக அரசு அகழி வெட்டி நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: