சிவகங்கை: சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரியில் பொது சுகாதாரத்துறை சார்பில் முன்களப் பணியாளர்கள் மற்றும் 60வயதிற்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பிற்கான பூஸ்டர் தடுப்பூசி செலுத்தும் தொடக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது. கலெக்டர் மதுசூதன்ரெட்டி தலைமை வகித்தார். இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தி 8 மாதங்களுக்கு மேல் ஆனவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தினால், நோய்த்தாக்குதலில் இருந்து பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும், இம்மாதத்திற்கு 11,908 பேருக்கு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், கோவாக்சின் மற்றும் கோவிசீல்டு தடுப்பூசி போதியளவு தயார் நிலையில் உள்ளதாகவும் சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.