மக்களுக்கு மாஸ்க் வழங்கிய எஸ்பி

மதுரை: மதுரை மாவட்டத்தில் கொரோ னா தொற்றினைத் தடுக்கும் வகையில் மதுரை மாவட்ட எஸ்பி பாஸ்கரன் உத்தரவில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்பேரில், பொது மக்களுக்கு முகக்கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கப்பட்டு வருகிறது. நேற்று ஒத்தக்கடை பகுதியில் எஸ்பி பாஸ்கரன் பொதுமக்களுக்கும், பஸ்களில் பயணித்தவர்களுக்கும் முகக் கவசங்களை வழங்கினார்.

பொது இடங்களில் மக்கள் கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகள் குறித்து பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேலும், பொதுமக்கள் போலீசாருக்கு தங்களது ஒத்துழைப்பை வழங்கி கொரோனா பரவலை கட்டுப்படுத்த உதவிடுமாறும் வேண்டுகோள் விடுத்தார். இதேபோல் மதுரை நகர் போக்குவரத்து துணை கமிஷனர் ஆறுமுகச்சாமி தலைமையில் போலீசார் நேற்று தல்லாகுளம், தெப்பக்குளம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுமக்களுக்கு முகக்கவசங்கள், சானிடைசர் மற்றும் கையுறை உள்ளிட்டவற்றை வழங்கினர். கொரோனா தொற்றிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து அந்தந்த பகுதி இன்ஸ்பெக்டர்கள் ஆங்காங்கே பொதுமக்களிடம் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.

Related Stories: