×

திருச்செங்கோடு நகராட்சி பகுதியில் ஆணையர் ஆய்வு

திருச்செங்கோடு: திருச்செங்கோடு புதிய பேருந்து நிலையம் பகுதிகளில், நகராட்சி ஆணையாளர் கணேசன் மற்றும் அலுவலர்கள் நேற்று கடைகளில் ஆய்வு நடத்தினர். அப்போது, சாலையில் முககவசம் அணியாமல் சென்றவர்களுக்கு அபராதம் விதித்தனர். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களிடம் முக கவசம் அணிவதன் அவசியம் குறித்தும், பயணிகளிடம் ெகாரோனா தடுப்பூசி பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் கேட்டுக்கொண்டார். தொடர்ந்து வாடகை வாகன ஓட்டுனர்கள் இரண்டு தவணை ெகாரோனா தடுப்பூசி போட்ட பிறகே, வாகனங்களை இயக்க வேண்டும். வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றாத வாகனங்கள் கண்டறியப்பட்டால், ஊரடங்கு காலம் முடியும் வரை இயக்க தடை விதிக்கப்படும் என எச்சரித்தார்.

பின்னர், ஜவுளிக்கடைகளில் ஆய்வு மேற்கொண்ட ஆணையாளர், கடைக்கு வெளியே சானிடைசர் வைக்கப்பட்டுள்ளதா, ஊழியர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் அணிந்துள்ளார்களா, அவர்கள் தடுப்பூசி போட்டதற்கான சான்றுகள் வைத்துள்ளனரா என ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது, நகராட்சி சுகாதார அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர்கள் ஜான்ராஜா, குமரவேல், நகுல்சாமி ஆகியோர் உடனிருந்தனர்.

Tags : Tiruchengode ,
× RELATED மாணவர்களுக்கு எம்எல்ஏ வாழ்த்து