சன்சைன் நகரில் இல்லம் தேடி கல்வி கற்றல் மையம் துவக்கம்

ஊட்டி: நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட சுள்ளிகூடு பள்ளி சார்ந்த சன்சைன் நகரில் இல்லம் தேடி கல்வி கற்றல் மையம் துவக்கப்பட்டது. கோவிட் பரவல் 18 மாத கால இடைவெளியில் பள்ளி மாணவர்கள் முறையான கற்றல் வாய்ப்பு இன்றி தவித்தனர். அதனை போக்கும் விதத்திலும் இழந்த கற்றலை மீட்டெடுக்கும் முயற்சியாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் இல்லம் தேடி கல்வி திட்டம் செயலாக்கம் பெற்றது. தகுதியான பயிற்சி பெற்ற தன்னார்வலர்களால் கற்றல் மையங்கள் தொடங்கப்பட்டு நடைபெற்று வருகின்றன. கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் நெடுகுளா ஊராட்சிக்குட்பட்ட சுள்ளிகூடு பள்ளி சார்ந்த சன்சைன் நகர் இல்லம் தேடி கல்வி கற்றல் மையத்தை நீலகிரி மாவட்ட ஊராட்சி தலைவர் பொன்தோஸ் தலைமை வகித்து திறந்து வைத்தார்.

இதில் மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் தலைவர் மற்றும் நாவா தலைவர் ஆல்வாஸ்,கோத்தகிரி ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் ராம்குமார், கீழ் கோத்தகிரி ஒன்றிய திமுக., செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் இல்லம் தேடி கல்வி வட்டார, பயிற்சி மற்றும் கலைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஆனந்தன், நீலகிரி மலைச் சாரல் கலைக் குழுவினர்,ஆசிரியைகள், மாணவர்கள், பெற்றோர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர். இறுதியில் மைய தன் ஆர்வலர்  செல்வி கிருஷ்ணவேணி உறுதிமொழி எடுத்ததுடன் நன்றி கூறினார். விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளை மைய தன் ஆர்வலருடன் சேர்ந்து இல்லம் தேடி கல்வி மாநில கருத்தாளரும், மாவட்ட உறுப்பினரும், கலைக்குழு ஒருங்கிணைப்பாளரும், குண்டாடா பள்ளி தலைமை ஆசிரியருமான நஞ்சுண்டன் செய்திருந்தார்.

Related Stories: