ஊட்டி - கூடலூர் சாலை சீரமைப்பு பணி துவக்கம்

ஊட்டி: ஊட்டியில் இருந்து கூடலூர் செல்லும் சாலையில் பிங்கர்போஸ்ட் முதல் தலைகுந்தா வரையில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. மேட்டுப்பாளையம் முதல் தமிழக - கர்நாடக எல்லையான கக்கநல்லா வரை தேசிய நெடுஞ்சாலை உள்ளது. இதில் பெரும்பாலான பகுதிகளில் தற்போது சாலை விரிவாக்க பணிகள் மற்றும் சிறு பாலங்கள் கட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இச்சாலையில் ஊட்டி அருகேயுள்ள பிங்கர்போஸ்ட் முதல் தலைகுந்தா வரையில் சாலையில் பல இடங்களில் சிறு பாலங்கள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், சாலை வரிவாக்க பணிகளும் கடந்த சில மாதங்களாக மேற்கொள்ளப்பட்டு வந்தது. மேலும், தலைகுந்தா பகுதியில் பாலம் கட்டும் பணி மேற்கொள்ளப்பட்டு வந்தது. இதனால், சாலை பழுதடைந்து காணப்பட்டது.

மேலும், ஒரு சில இடங்களில் பெரிய அளவிலான பள்ளங்களும் ஏற்பட்டிருந்தது. இந்நிலையில், இச்சாலையை சீரமைக்க வேண்டும் என வாகன ஓட்டுநர்கள் மற்றும் பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். இதனை தொடர்ந்து. இச்சாலையில் சீரமைப்பு பணிகள் துவக்கப்பட்டுள்ளது. தற்போது தலைகுந்தா முதல் பிங்கர் போஸ்ட் வரை சாலை சீரமைப்பு பணிகளை தேசிய நெடுஞ்சாலைத்துறை துவக்கியுள்ளது. சாலை விரிவாக்கம் செய்யப்பட்ட எச்பிஎப்., தலைகுந்தா போன்ற பகுதிகளிலும் சாலை அமைக்கும் பணிகள் மேள்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் நிம்மதியடைந்துள்ளனர்.

Related Stories: