பஞ்சாப் அரசை கலைக்க பாஜ முயற்சி: ஆளுநருக்கு பரிந்துரைக்க கலெக்டரிடம் மனு

திருவள்ளுர்: பஞ்சாப் அரசை கலைக்க பாஜ அரசு முயற்சிப்பதை எதிர்த்து மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஆளுநருக்கு பரிந்துரை செய்ய கோரி, திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் தலைவர்கள் ஏ.ஜி.சிதம்பரம், திருவேற்காடு டி.ரமேஷ் ஆகியோர் கலெக்டர் ஆல்பிஜான் வர்கீஸிடம் மனு அளித்தனர்.

கடந்த 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி, பஞ்சாப் மாநிலத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு சென்றார். அப்போது விவசாயிகளின் கடும் எதிர்ப்பால் பாதுகாப்பு குறைபாடு காரணமாக அவர் டெல்லி திரும்பினார்.

இதனை, பாஜ அரசு அரசியலாக்கிபஞ்சாப் அரசை கலைக்க சதி திட்டம் தீட்டி வருகிறது.அத்தகைய ஆட்சி கலைப்பு திட்டத்தை எதிர்த்து, நாடு முழுவதும் அந்தந்த மாவட்ட காங்கிரஸ் பிரதிநிதிகள், மாவட்ட கலெடர்கள் மூலமாக மாநில ஆளுநருக்கு பரிந்துரை கடிதம் அனுப்ப கோரி காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டது.

அதன் பேரில் திருவள்ளூர் கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸை சந்தித்து பஞ்சாப் அரசை கலைக்க சதி திட்டம் தீட்டி வருவதைக் கண்டித்தும், அத்தகைய ஆட்சிக் கலைப்பு திட்டத்தை கைவிடக் கோரியும், எதிர்த்து ஆளுநருக்கு பரிந்துரை செய்யுமாறு மனு அளித்தனர். அவர்களுடன், மாநில நிர்வாகிகள் ஏகாட்டூர் ஆனந்தன், ஜெ.கே.வெங்கடேசன், நகர தலைவர் வழக்கறிஞர் வி.இ.ஜான், ஜே.டி.அருள்மொழி, பூண்டி ஆர்.ராஜா, எஸ்.சரஸ்வதி, வி.எஸ்.ரகுராமன், ஜி.எம்.பழனி, பட்டரை சண்முகம் உள்பட பலர் இருந்தனர்.

Related Stories: