2 குழந்தைகளுடன் இளம்பெண் ஓட்டம்

சேலம், ஜன.9: சேலம் மாவட்டம் கருப்பூர் அருகேயுள்ள மூங்கில்பாடி கொல்லம்பட்டியை சேர்ந்தவர் தங்கராஜ் (31), கூலித்தொழிலாளி. இவரது மனைவி தமிழரசி (27). இவர்களுக்கு 5 வயதில் மகனும், 3 வயதில் மகளும் உள்ளனர். இந்நிலையில், கடந்த 6ம் தேதி காலையில் தங்கராஜ், வேலைக்குச் சென்றார். மாலையில் வீடு திரும்பியபோது, மனைவி மற்றும் குழந்தைகளை காணவில்லை. உறவினர் வீடுகளில் தேடி பார்த்தும் இல்லை. வீட்டில், தமிழரசி எழுதி வைத்திருந்த ஒரு கடிதம் இருந்தது. அதில், ‘‘தான் விரும்பியவருடன் செல்கிறேன். இனி என்னை தேட வேண்டாம்,’’ என எழுதப்பட்டிருந்தது. இதுபற்றி கருப்பூர் போலீசில் தங்கராஜ் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான தமிழரசி மற்றும் இரு குழந்தைகளை தேடி வருகின்றனர். அவருடன் நெருங்கி பழகிய நபர் பற்றியும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: