×

பெரியகுளம் அருகே சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க காமிராக்கள் கூண்டு வைத்து பிடிக்க ஏற்பாடு

பெரியகுளம், ஜன. 9: பெரியகுளம் பகுதியில் தொடர்ந்து கால்நடைகளை தாக்கி வரும் சிறுத்தையை பிடிக்க 3 கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர். கூண்டு வைத்து சிறுத்தை பிடிக்கப்படும் என வனத் துறையினர் தெரிவித்துள்ளனர். பெரியகுளம் அருகே உள்ள ஈச்சமலைப்பகுதியில் உள்ள மாந்தோப்புகளில் வளர்த்து வந்த கால்நடைகளான ஆடு, மாடு மற்றும் நாய்களை கடந்த சில மாதங்களாக சிறுத்தை தாக்கியதில் 4 மாடுகள், 2 ஆடுகள் மற்றும் காவலுக்கு இருந்த நாய்கள் பலியாகியின. நேற்று முன்தினம் பசு மாடு ஒன்றை சிறுத்தை தாக்கி கொன்றது. இதனால் மாந்தோப்புகளில் கால்நடைகள் வளர்ப்பது மற்றும் காவல்பணியில் இருக்கும் விவசாயிகளுக்கு பெரும் அச்சத்தை ஏற்படுத்தியதோடு சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், தேவதானப்பட்டி வனச்சரக வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்காணிக்க மாடுகளை தாக்கிய தோப்புப் பகுதியில் 3 கண்காணிப்பு காமிராக்களை பொருத்தி கண்காணிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் பொருத்தப்பட்ட காமிராக்களில் சிறுத்தை நடமாட்டம் தென்பட்டால் அந்த பகுதியில் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைக்கப்பட உள்ளதாக வனத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

Tags : Periyakulam ,
× RELATED கோடை வெப்பத்தை தணிக்க கும்பக்கரையில் குவியும் பயணிகள்