×

மக்கள் சாரை, சாரையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு, அதை தடுப்பூசி திருவிழாவைப் போல கொண்டாடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!!

சென்னை : மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின்படி இன்று (27-9-2021) சென்னை எழும்பூரில் உள்ள தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 117வது பிறந்தநாளை முன்னிட்டு, மாண்புமிகு செய்தித்துறை அமைச்சர் திரு.மு.பெ.சாமிநாதன், மாண்புமிகு சமூகநலன்- மகளிர் உரிமைத்துறை அமைச்சர் திருமதி.கீதாஜீவன், மாண்புமிகு  மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு மாண்புமிகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அவர்கள் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது தெரிவித்ததாவது: மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செப்.12ஆம் தேதி 40 ஆயிரம் முகாம்கள் மூலம் 20 லட்சம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களால் ஏற்படுத்தப்பட்ட விழிப்புணர்வின் காரணமாய் 28 லட்சத்து 91 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டது. 16 ஆயிரம் தடுப்பூசிகள் மட்டுமே கையிருப்பில் இருந்ததை வைத்து, இரண்டாவது வாரமே செப்.19ஆம் தேதி 20 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடத்தப்பட்ட தடுப்பூசி முகாம்களில் 16 லட்சத்து 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஒன்றிய அரசின் பிரதமர் அவர்களுக்கு தமிழகத்திற்கு வாரத்திற்கு 50 லட்சம் தடுப்பூசிகள் வேண்டுமென்று கடிதம் எழுதியதின் வாயிலாகவும், நாடாளுமன்ற குழுத் தலைவர் டி.ஆர்.பாலு அவர்களை டெல்லிக்கு அனுப்பி ஒன்றிய அமைச்சர் அவர்களை சந்தித்து வலியுறுத்தியதன் அடிப்படையிலும் 28 லட்சம் தடுப்பூசிகள் தமிழகத்திற்கு வந்தது. அதை அனைத்து மாவட்டங்களுக்கும் பிரித்து அனுப்பப்பட்டு, நேற்றைக்கு மூன்றாவது கொரோனாத் தடுப்பூசி முகாம் தமிழகம் முழுவதும் 23 ஆயிரம் முகாம்கள் மூலம் 15 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, அது 24 லட்சம்  93 ஆயிரம் பேருக்கு கொரோனாத் தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. இன்று தடுப்பூசி முகாம்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தற்போது கையிருப்பில் உள்ள தடுப்பூசிகள் 3 லட்சம் அளவுக்கு உள்ளது. நான் மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறையின் செயலாளரும், ஒன்றிய அரசின் உயர் அலுவலர்களுடன் தடுப்பூசிகள் குறித்து பேச இருக்கிறோம். மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் கோரிக்கையான வாரந்தோறும் 50 லட்சம் தடுப்பூசிகள் என்ற இலக்கை ஒன்றிய அரசு நிறைவேற்றுமானால், இந்த வாரமும் நான்காவது மாபெரும் தடுப்பூசி முகாம் நடத்தப்படும்.தடுப்பூசி செலுத்துவதற்கு யாரையும் கட்டாயப்படுத்தவில்லை. நடைபெற்ற மூன்று மாபெரும் தடுப்பூசி முகாம்களில் பொதுமக்கள் சாரை, சாரையாய் வந்து தடுப்பூசிகள் செலுத்திக்கொண்டு, அதை ஒரு தடுப்பூசி திருவிழாவாகவே நடத்தினர். 12 மணிக்கெல்லாம் நிர்ணயித்த இலக்கைக் கடந்து, தடுப்பூசிகள் போதவில்லை என்ற நிலைதான் ஏற்படுகிறது. யாரையும் கட்டாயப்படுத்தி தடுப்பூசிகள் செலுத்திக்கொள்ள சொல்லவில்லை. அப்படியே சொன்னாலும் அதில் தவறொன்றுமில்லை என்று மாண்புமிகு அமைச்சர் அவர்கள் தெரிவித்தார்….

The post மக்கள் சாரை, சாரையாக தடுப்பூசி செலுத்திக்கொண்டு, அதை தடுப்பூசி திருவிழாவைப் போல கொண்டாடுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி!! appeared first on Dinakaran.

Tags : Minister ,M. Subramanian ,Chennai ,Chief Minister of ,Tamilnadu ,C.P. Adithanar ,Egmore, Chennai ,
× RELATED தமிழச்சி தங்கபாண்டியனை ஆதரித்து...