புதுக்கோட்டை கிராமத்தில் பேவர்பிளாக் சாலை பணி துவக்கம்

கமுதி, ஜன.9: கமுதி-சாயல்குடி சாலையில் உள்ள புதுக்கோட்டை கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மற்றும் அதன் அருகே உள்ள கலையரங்கம் ஆகியவை முன்பு சாலை இல்லாததால் மழை காலங்களில் சேறும் சகதியுமாக காணப்பட்டு மக்கள் மிகவும் அவதிப்பட்டு வந்தனர். எனவே இப்பகுதி மக்கள் பள்ளி முன்பு தளம் அமைக்க பல வருடங்களாக கோரிக்கை வைத்து வந்தனர். இந்நிலையில், திமுக தெற்கு மாவட்ட கவுன்சிலர் போஸ் சசிக்குமார் ஏற்பாட்டின் பேரில், தனது மாவட்ட ஊராட்சி குழு நிதியில் இருந்து தொடக்கப்பள்ளி மற்றும் கலையரங்கம் போன்ற பகுதிகளை சுற்றிலும் பேவர் பிளாக் தளம் அமைக்கும் பணி நேற்று பூமிபூஜையுடன் துவங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் கணேசன், ஊராட்சி மன்ற தலைவர் வீரபாண்டி, முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவர் கோவிந்தன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் இந்திரா, நீதிராஜன், வாட்டர்போர்டு முத்துராமலிங்கம், மணிகண்டன், ஆசிரியர் கணேசன், ரத்தினவேல், கோவிலாங்குளம் காளிமுத்து, பேரையூர் பெரியாள், வக்கீல் நிறைபாண்டி, மாரிமுத்து, புலிஉடையான் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: