அலங்காநல்லூர் பகுதியில் பொங்கலுக்கு தயாராகும் கொப்பரை வெல்லம்

அலங்காநல்லூர், ஜன. 9: தைப்பொங்கலையொட்டி, அலங்காநல்லூர் பகுதியில் கொப்பரை வெல்லம் தயாரிக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. தமிழகத்தில் சாதி, மத பேதமின்றி அனைத்து தரப்பு மக்களும் கொண்டாடும் பண்டிகை தைப்பொங்கல். தமிழகத்தில் மட்டுமல்லாமல், உலக முழுவதும் தமிழர்கள் கொண்டாடும் பண்டிகையாக பொங்கல் திகழ்கிறது. உலகத்திற்கு ஒளி கொடுக்கும் சூரியனை வழிபடும் நிகழ்வாகவும், விவசாயம் செழிக்கவும், தைப்பொங்கல் கொண்டாடுகின்றனர். போகிப் பண்டிகை, தைப் பொங்கல், மாட்டுப்பொங்கல், காணும் பொங்கல் என 4 நாள் திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. பொங்கி வரும் புதுப்பானையை மஞ்சள் கொத்து செடிகள் அலங்கரிக்கும். தித்திக்கும் செங்கரும்பு வீடுதோறும் அலங்கரிக்கும். இவைகள் அலங்காநல்லூர் பகுதியில் விளைவிக்கப்பட்டு, அறுவடை செய்யப்பட்டு வருகிறது. மேலும், அலங்காநல்லூர், பாலமேடு வட்டாரத்தில், கரும்பு அரவை செய்து, சாறு பிழிந்து ராட்சத கொப்பரையில் காய்ச்சி, வெல்லம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

Related Stories: