மங்களூர் ஒன்றியத்தில் திட்டப்பணிகள்

திட்டக்குடி, ஜன. 9:  கடலூர் மாவட்டம் மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் நடந்து வரும்  திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் ஆய்வு செய்தார். மங்களூர்  ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட 66 ஊராட்சிகளில், ஊரக வளர்ச்சி துறை  சார்பில் பல திட்டப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியர் பாலசுப்ரமணியம் நேரில்  ஆய்வு செய்தார். மேலும், திட்டப்பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.  மங்களூர் ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் திட்டத்தின் கீழ் வளர்க்கப்படும்  மரக்கன்றுகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். தொடர்ந்து அலுவலகத்தை ஆய்வு  செய்தார். கூடுதல் ஆட்சியர் பவன்குமார் ஜி கிரியப்பனவர், செயற்பொறியாளர்  தணிகாசலம், நேர்முக உதவியாளர் மல்லிகா, மங்களூர் ஒன்றியக்குழு தலைவர்  சுகுணா சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தண்டபாணி, சண்முகசிகாமணி,  வசந்தா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள், பொறியாளர்கள், உதவி  பொறியாளர்கள், பணிமேற்பார்வையாளர்கள், ஒன்றிய அலுவலகத்தில் பணிபுரியும்  அதிகாரிகள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் உள்ளிட்ட பலர்  உடனிருந்தனர்.

Related Stories: