×

கரூர் மாநகராட்சியில் ரூ.38.24 கோடியில் தார்சாலை, வடிகால் வசதி,சிறுபாலம் கட்ட திட்டப்பணிகள் பூமி பூஜை அமைச்சர் செந்தில்பாலாஜி துவக்கி வைத்தார்

கரூர் ,ஜன.9:கரூர் மாநகராட்சி பகுதியில் ரூ. 38.24கோடி மதிப்பிலான சாலை வடிகால் வசதி மற்றும் சிறு பாலம் கட்ட திட்ட பணிகளுக்கு தமிழக மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார்.கரூர் மாவட்டத்திற்கு ரூ 2 ஆயிரம் கோடி மதிப்பில் பல்வேறு திட்ட திட்ட பணிகளுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்புதல் அளித்து திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது.இதன் அடிப்படையில் கரூர் மாநகராட்சிக்கு முக்கிய தேவையாக நகர இணைப்புச் சாலைகள், மாநில நெடுஞ்சாலைத்துறை ,மற்றும் கிராம இணைப்புச் சாலைகள்அமைக்க ரூபாய் கரூர் மாநகராட்சி உட்பட்ட கே வி பி நகர் , வேலுச்சாமி புரம் ,செங்குந்தபுரம், வையாபுரி நகர் ,மகாத்மா காந்தி சாலை, காமராஜர்புரம், விவேகானந்தர் நகர் , கேவிபி நகர் ,குளத்துப்பாளையம், வெங்கமேடு ,நேதாஜி நகர், சின்ன ஆண்டான் கோவில் ரோடு, தீரன் சின்ன மலை நகர் ,பெரியார் சாலை, அனுமந்தராயன் கோவில் தெரு, சர்ச் கார்னர் மற்றும் ராமகிருஷ்ணாபுரம் பகுதிகளில் ரூ.22 கோடி மதிப்பில் புதிய தார் சாலை திட்டத்திற்கு பூமி பூஜை நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு எம்பி ஜோதிமணி, எம்எல்ஏக்கள் குளித்தலை மாணிக்கம் , அரவக்குறிச்சி இளங்கோ கரூர் மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் முன்னிலை வகித்தனர்.

நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி கலந்து கொண்டு புதிய தார்சாலைக்கு பூமி பூஜை செய்து வைத்தார். அதேபோல் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூபாய் 10 கோடி மதிப்பில் கழிவுநீர் வடிகால் வசதிக்கும், சிறு பாலம் மற்றும் உள்கட்டமைப்பு ரூபாய் 6 கோடி மதிப்பிலும் திட்டப்பணிகள் செய்திட பூமி பூஜை செய்து பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கரூர் மத்திய நகர கழக பொறுப்பாளர் கனகராஜ், மத்திய கிழக்கு நகர பொறுப்பாளர் ஆர் எஸ் ராஜா, வடக்கு நகர பொறுப்பாளர்கள் கரூர் கணேசன், மேற்கு நகர பொறுப்பாளர் தாரணி சரவணன், கரூர் மத்திய மேற்கு நகர பொறுப்பாளர் அன்பரசன். தெற்கு நகர பொறுப்பாளர் வக்கீல் சுப்பிரமணியன், தொழிலதிபர்கள் எம் சி எஸ் சங்கர் ஆனந்த், பால விநாயகா புளூ மெட்டல்ஸ் தங்கராஜ், தகவல் தொழில்நுட்ப பிரிவு தம்பி சுதாகர் உள்பட பலர் கலந்து கொண்டனர். பூமி பூஜை நிகழ்ச்சியை முன்னிட்டு கட்சி நிர்வாகிகள் அமைச்சருக்கு வரவேற்பு அளித்தனர். அடிக்கல் நடக்கும் நிகழ்ச்சியானது நேற்று சுமார் 115 இடங்களில் நடைபெற்றது.

Tags : Bhoomi Pooja ,Minister ,Senthilpalaji ,Darsala ,Karur Corporation ,
× RELATED நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில்...