அகில இந்திய இன்சூரன்ஸ் சங்க கிளை பேரவை கூட்டம்

புதுக்கோட்டை, ஜன.9: புதுக்கோட்டையில் அகில இந்திய இன்சூரன்ஸ் முகவர்கள் சங்க கிளையின் ஆண்டு பேரவை கூட்டம் நடைபெற்றது.அகில இந்திய இன்சூரன்ஸ் முகவர்கள் சங்கத்தின் புதுக்கோட்டை கிளை சார்பில் 15ம் ஆண்டு பேரவை கூட்டம் புதுக்கோட்டை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள அறிவியல் அறங்கத்தில் தலைவர் தங்கவேல் தலைமையில் நடைபெற்றது. செயலாளர் முகமதுபாரூக் ஆண்டு அறிக்கை வாசித்தார். பொருளாளர் வேணுகோபால் வரவு செலவு அறிக்கை தாக்கல் செய்தார். சங்கத்தின் தமிழ் மாநில செயலாளர் தஞ்சை ராஜா கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தின் முடிவில் புதிய தலைவராக ஆறுமுகம், செயலாளராக மதியழகன், பொருளாளராக பானுமதி ஆகியோர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர். இந்த கூட்டத்தில் முகவர்கள் பலர் கலந்து கொண்டனர்

Related Stories: