மக்கள்குறைதீர் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைப்பு

புதுக்கோட்டை, ஜன.9: புதுக்கோட்டை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள்குறைதீர் கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைதீர் கூட்டம் தமிழக அரசின் உத்தரவின்படி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் தங்கள் குறைகளை வாட்ஸ்அப் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியில் பதிவிடலாம் என்று கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.இதுகுறித்து புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் கவிதாராமு விடுத்துள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:தமிழக முதலமைச்சர் அவர்களின் ஆணையின்படி மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் திங்கட்கிழமை தோறும் நடைபெற்று வந்த மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மற்றும் மாதம்தோறும் நடைபெற்று வந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டங்கள் உட்பட அனைத்து குறைதீர்க்கும் நாள் கூட்டங்களும் கொரோனா நோய்த்தொற்று பரவல் அதிகரித்து வரும் காரணத்தினால் தமிழக அரசிடமிருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரையில் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்படுகிறது. என தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும், பொது மக்கள் தங்கள் குறைகளை 9445008146 என்ற வாட்ஸ்ஆப் எண்ணிலும், yseccoll.tnpdk@nic.in < mailto:yseccoll.tnpdk@nic.in > என்ற மின்னஞ்சல் முகவரியிலும் பதிவிடலாம் என மாவட்ட கலெக்டர் கவிதா ராமு, தெரிவித்துள்ளார்.

Related Stories: