கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக அரசு மருத்துவமனையில் ஆக்சிஜனுடன் வெண்டிலேட்டர் படுக்கை வசதி

திருவையாறு,ஜன.9: திருவையாறு அரசு மருத்துவமனையில் கொரோனா தொற்று தடுப்பு முன்னெச்சரிக்கையாக ஆக்சிஜன் வெண்டிலேட்டருடன் படுக்கை வசதியை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் ஆய்வு செய்தார். ஆய்வின்போது நாளுக்கு நாள் அதிகமாக பரவிக்கொண்டிருக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அமைக்கப்பட்டுள்ள படுக்கை வசதிகள், ஆக்சிஜனுடன் கூடிய வென்டிலேட்டார் படுக்கை வசதிகள், மருந்து மாத்திரைகள், மருத்துவர்கள், பணியாளர்கள் ஆகியோரின் விவரங்களையும் கேட்டறிந்து உடனடியாக எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் என்று மருத்துவ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினார்.

ஆய்வின்போது சுகாதார நலப்பணிகள் இணை இயக்குநர் திலகம், ஒன்றியக்குழுத் தலைவர் அரசாபகரன், தலைமை மருத்துவர் லோகநாதன், வட்டார மருத்துவர் செல்வகுமார், தாசில்தார் நெடுஞ்செழியன், ஊராட்சி ஒன்றிய ஆணையர்கள் நந்தினி, ஜான்கென்னடி, பேரூராட்சி செயல் அலுவலர் சோமசுந்தரம், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சதாசிவம், வருவாய் ஆய்வாளர் சாந்தி, கிராம நிர்வாக அலுவலர்கள், பழனியாண்டி, அன்பழகன் ஆகியோர் உடனிருந்தனர். அதை தொடர்ந்து கருப்பூர் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொங்கல் பரிசுதொகுப்பு வழங்குவதையும், தடுப்பூசிபோடும் முகாமையும் கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Related Stories: