திருவாரூரில் ரூ.1 கோடியில் நெல்சேமிப்பு கிடங்கு முதல்வர் காணொலி மூலம் திறப்பு

திருவாரூர், ஜன. 9: திருவாரூரில் ரூ 1 கோடி மதிப்பில் கட்டப்பட்ட நெல் சேமிப்பு கிடங்கினை நேற்று முதல்வர் மு.க ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறையின் சார்பில் திருவாரூரில் ரூ.1 கோடி மதிப்பீட்டில் 500 மெ.டன் கொள்ளளவு கொண்ட புதிய சேமிப்பு கிடங்கு கட்டப்பட்டுள்ள நிலையில் இதனை முதல்வர் மு. க ஸ்டாலின் நேற்று காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார். இதனையடுத்து இந்த நெல் சேமிப்பு கிடங்கில் நாகை எம்பி செல்வராஜ், டிஆர்ஓ சிதம்பரம் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர்.  பின்னர் டிஆர்ஓ சிதம்பரம் கூறியதாவது, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, முத்துப்பேட்டை, மன்னார்குடி, கோட்டூர், நீடாமங்கலம், நன்னிலம், குடவாசல், கொரடாச்சேரி மற்றும் வலங்கைமான் வட்டாரங்களில் ரூ.24 கோடியே 30லட்சம் மதிப்பீட்டளவில் 16 ஆயிரம் மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்குகள் கட்டுவதற்கு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதில் திருவாரூரில்500 மெ.டன், பூந்தோட்டம் 3000 மெ.டன், மன்னார்குடி 1000 மெ.டன், திருத்துறைப்பூண்டி 5000 மெ.டன் கொள்ளளவு என மொத்தம் 5 நெற்கிடங்குகள் தேசிய வேளாண் வளர்ச்சி திட்டத்தில் ரூ14 கோடி நிதியுதவியுடன் கட்டி முடிக்கப்பட்டு இன்றையதினம் (நேற்று) தமிழக முதல்வரால் காணொலி காட்சி மூலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. எனவே இந்த கிடங்கு வசதிகளை விவசாயிகள் பயன்படுத்த தங்கள் விளைபொருளை குறைந்த வாடகையில் சேமித்து பயன்பெறலாம். என்றார். நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை) லெட்சுமிகாந்தன், ஆர்.டி ஒபாலசந்திரன், ஒன்றியககுழுத்தலைவர் புலிவலம் தேவா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) ஹேமா ஹெப்சிபா நிர்மலா, வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சரசு உள்ளிட்ட அரசு அலுவலர்கள், உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

Related Stories: