×

சுகாதாரத்துறை துணை இயக்குனர் தகவல் முழு ஊரடங்கையொட்டி திருவாரூரில் கடைவீதிகளில் பொருட்கள் வாங்க குவிந்த மக்கள்

திருவாரூர், ஜன. 9: தென்ஆப்பிரிக்கா நாட்டிலிருந்து துவங்கியுள்ள புதிய வகை ஒமிக்ரான் வைரஸ் மற்றும் 3ம் அலை காரணமாக தமிழகத்தில் தற்போது தொற்று எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் வகையில் கடந்த 6ம் தேதி முதல் ஒரு சில கட்டுப்பாடுகளை முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்துள்ளார். அதன்படி இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரையில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. இந்த நேரத்தில் வணிக நிறுவனங்கள் செயல்படுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்களின் நலன் கருதி போக்குவரத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வணிக நிறுவனங்களில் 50 சதவீத அளவில் வாடிக்கையாளர்கள் அனுமதிக்க வேண்டும் என்பதுடன் திருமண நிகழ்ச்சிக்கு 100 பேர்களும், இறப்பு நிகழ்ச்சிகளுக்கு 50 பேர்களுக்கும் மிகாமல் பங்கேற்க அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் மருத்துவமனைகள், மருந்தகங்கள், ஏடிஎம் மையங்கள், பெட்ரோல் பங்குகள் போன்றவை 24 மணி நேரமும் செயல்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் 1 முதல் 9 வகுப்புகள் வரையில் நேரடி வகுப்புகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 மேலும் பொதுமக்கள் வெளியில் நடமாடும் போது முக கவசம் கட்டாயம் அணிய வேண்டும், சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. அதன்படி இன்று ( 9ம்தேதி) அத்தியாவசிய பொருட்களான பால், மருந்து தவிர பிற கடைகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பொதுமக்கள் தங்களுக்கான காய்கறிகள், மீன் மற்றும் இறைச்சி, மளிகை உள்ளிட்ட பொருட்களை நேற்றைய தினமே வாங்குவதற்காக மாநிலம் முழுவதும் கடைவீதிகளில் குவிந்தனர். இதனையொட்டி திருவாரூர் மாவட்டத்திலும் திருவாரூர் கடைத்தெரு பகுதியில் இயங்கி வரும் காய்கறி கடைகள், மளிகை கடைகள் மற்றும் நகர் முழுவதும் இயங்கி வரும் இறைச்சி மற்றும் மீன் கடைகளில் தங்களுக்கு தேவையானவற்றை வாங்குவதற்காக குவிந்தனர்.

Tags : Deputy Director ,
× RELATED கர்ப்பிணிகள் தனியாக வெயில் நேரத்தில்...