கலைஞரின் வருமுன் காப்போம் திட்ட முகாம்: எம்எல்ஏ எழிலரசன் துவக்கி வைத்தார்

காஞ்சிபுரம்: பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை சார்பில் காரை ஊராட்சியில் கலைஞரின் வருமுன் காப்போம் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. இதனை, எம்எல்ஏ வக்கீல் எழிலரசன் குத்து விளக்கு ஏற்றி துவக்கி வைத்தார்.முகாமில் கலந்து கொண்ட மக்களுக்கு, ரத்த அழுத்தம், நீரிழிவு, கண், பல் உள்பட பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டன.

தொடர்ந்து ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட காய்கறிகள் பழ வகைகள் கண்காட்சியை எம்எல்ஏ பார்வையிட்டார்ஒன்றிய செயலாளர் எஸ்.பி.பூபாலன், வாலாஜாபாத் ஒன்றிய குழு பெருந்தலைவர் தேவேந்திரன், மாவட்ட கவுன்சிலர் ராஜலட்சுமி, ஒன்றிய துணை செயலாளர்கள் படுநெல்லி, பாபு, கவிதா பாபு, மாவட்ட பிரதிநிதி பார்த்திபன்,  மாவட்ட விவசாய அணி தொழிலாளர் அணி அமைப்பாளர் வேதாச்சலம், வட்டார மருத்துவ அலுவலர் உமா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ராதாகிருஷ்ணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: